பந்தயக்கோழி
.
Sunday, 17 August, 2008 03:20 PM
.
பியூச்சர் பிலிம்ஸ் எனும் புதிய பட நிறுவனம் சார்பில் ஜே.பி.குமார் என்பவர் "பந்தயக்கோழி' என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதில் கதாநாயகனாக நரேனும், கதாநாயகியாக பூஜாவும் நடித்து வருகின்றனர்.
.
தாய்க்கும், மகனுக்குமான பாசத்தையும், தாயின் சபதத்தை நிறைவேற்றும் மகனின் கடமையையும் கொண்ட ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.நரேன், பூஜா மட்டுமல்லாது கீதா, லால், வி.எம்.சி. ஹனிபா, போஸ் வெங்கட், ரம்யா நம்பீசன் உட்பட பலர் நடித்து வருகின்றனர். அலெக்ஸ்பால் இசையில் கவிஞர் ஜெயந்தா பாடல்கள் எழுதுகிறார்.வேணுகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி வேணு எழுதுகிறார்.
No comments:
Post a Comment